......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 28 August 2012

நிந்தவூர் வாகன விபத்தில் கல்முனையைச் சேர்ந்த 6 பேர் வபாத்! (படங்கள்)

நிந்தவூர்  அட்டப்பளம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த முச்சக்கர வாகனம் மீது பஸ் ஒன்று மோதியதால்  முச்சக்கர வாகன சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்களில்  மூன்று பெண்கள், ஒரு ஆண், ஒரு சிறுவன், ஒரு சிறுமி ஆகியோர் அடங்குகின்றனர்.
முச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் சிறுமியொருவர் படுகாயமடைந்து நிந்தவூர் மாவட்ட   வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏனையோரின் ஜனாஸாக்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கல்முனைக்குடி 13  புதிய வீதியைச் சேர்ந்த எம்.எம்.ஜெமினா (40) எம்.எச்.இர்பானா (24), எம்.எச்.ரிஹானா ( 34), எம்.எச்.எம். அன்ஸார் (மூன்றரை வயது), எம்.எச்.எம். அப்துல் சஹ்ராஸ் (2 வயது) ஆகிய பயணிகளும் முச்சக்கர வாகன சாரதி சஹாப்தீனுமே இறந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
மேற்படி பஸ் சாரதி கல்முனை பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
படங்கள்: முகம்மட் அக்ரம்


(மூலம்: )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE