......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 28 January 2016

nintavur / இலங்கை பட்டக் கணக்காளர் நிறுவனத்தின் கணக்கியல் விஞ்ஞானமானி கற்கை!

தொழில்தேர்ச்சி மிக்க பட்டதாரிகளை உருவாக்கும் நோக்குடன் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம் கணக்கியல் விஞ்ஞானமானி(BSc. in Accountancy) கற்கைநெறியொன்றை ஆரம்பித்துள்ளது. 

இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கற்கைநெறி 3 வருடங்களைக் கொண்ட பொது விஞ்ஞானமானி அல்லது 4 வருடங்களைக் கொண்ட சிறப்பு விஞ்ஞானமானி என்ற இரண்டு நிலைகளில் நடாத்தப்படுகிறது.
வியாபார தொடர்பாடல்(Business Communication), பொருளியல், நிகழ்ச்சித்திட்ட முகாமைத்துவம்(Project Management), பெருநிறுவன சட்டம்(Corporate Law), மனிதவள முகாமைத்துவம்(Human Resource Management), தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்(Information and Communication Technology) உள்ளிட்ட பாடங்களை உள்ளடக்கியதாக இந்தக் கற்கைநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
முழு அளவு வசதிகள் கொண்ட கல்விப்பீடத்தில் முதுபெரும் பேராசிரியர்கள், தொழில்துறைசார்ந்தவர்கள், மற்றும் மூத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விரிவுரைகள் இந்தக் கற்கைநெறிக்கான விரிவுரைகளை நடாத்துகின்றனர்.
இந்தக் கற்கைநெறிக்கு அவுஸ்ரேலியாவின் CPA Australia அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றிருப்பதால், கற்கைநெறியைப் பூர்த்திசெய்யும் மாணவர்கள் தொடர்ந்து CPA Australia கற்கைநெறியையும் பின்பற்ற முடிவதுடன், CPA Australia உறுப்புரிமையையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதத்துக்கான மாணவர் உள்ளீர்ப்பு இப்போது நடைபெற்று வருவதால், க.பொ.த. உயர்தரத்தில் எந்தவொரு துறையிலும் 3 பாட சித்திபெற்ற மாணவர்கள் இந்தக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும், உயர்தரப் பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்களும் இந்தக் கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னணி கணக்கியல் நிறுவனமான பட்டயக் கணக்காளர் நிறுவனம் கணக்கியல் சார்ந்த தொழில்முறைக் கற்கைநெறிகளையும், பட்டக்கல்வியையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.



(மூலம்: siharam)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE