தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள்!
- கொழும்பு பல்கலைக்கழகம் (1682)
- மொறட்டுவ பல்கலைக்கழகம் (2011)
- பேராதனைப் பல்கலைக்கழகம் (2467)
- ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் (2759)
- களனி பல்கலைக்கழகம் (3294)
- ருகுணு பல்கலைக்கழகம் (3294)
- யாழ் பல்கலைக்கழகம் (5664)
- இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (5884)
- ரஜரட்ட பல்கலைக்கழகம் (6228)
- சப்பிரகமுவ பல்கலைக்கழகம் (9868)
- Sri Lanka Institute of Information Technology(SLIIT) (10546)
- Institute of Engineering Technology (11092)
- கிழக்குப் பல்கலைக்கழகம் (12322)
- வயம்ப பல்கலைக்கழகம் (12355)
- ஊவா வெல்லச பல்கலைக்கழகம் (12566)
- Arther C Clarke Institute of Modern Technologies (12596)
- தேசிய கல்வி நிறுவகம் (12895)
- Sri Lanka Institute of Architects (13065)
- Asia Pacific Institute of Information Technology (13558)
- Industrial Technology Institute (14621)
- Institute of Fundamental Studies Sri Lanka (14931)
- Post Graduate Institute of Agriculture (15255)
- Informatics Institute of Technology Sri Lanka (15331)
- Postgraduate Institute of Sciences (15694)
- General Sir John Kotelawala Defense University (15833)
- தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (16005)
- பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் (17068)
- இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (17515)
- கட்புல ஆற்றுகைக் கலைகளுக்கான பல்கலைக்கழகம் (17566)
- Sri Lanka Institute of Advanced Technological Education (17736)
பல்கலைக்கழகங்களை அவற்றின் கல்வித் தரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தும் முறைமை உள்நாட்டு அளவிலும், சர்வதேச அளவிலும் பொதுவாகப் பின்பற்றப்படுகிறது. இதில், சர்வதேச தரவரிசைப்படுத்தலை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. இங்கே Webomaerics 2012 ஜுலையில் வெளியிட்ட உலகத் தரவரிசை ஒழுங்கே அடைப்புக்குறிகளுக்குள் தரப்பட்டுள்ளது.
தரவரிசைப்படுத்தலுக்கான அளவுகோல்கள்
உயர்கல்வித்துறையில் உலகின் மிகப்பெரிய தரவரிசைப்படுத்தலான Webomaerics, உலகம் முழுவதிலுமுள்ள 17,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி கிரமமாக வெளியிட்டு வருகிறது. இந்தத் தரவரிசைப்படுத்தலுக்கு அது பின்வரும் அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது.
PRESENCE (20%) உலகின் முன்னணி இணையத்தேடல் இயந்திரமான Google இல் பட்டியல்படுத்தப்பட்டுள்ள பல்கலைக்கழக இணையத்தளத்தின் பக்கங்களின் எண்ணிக்கை.
IPACT (50%) மூன்றாம் நபர்களிடமிருந்து பல்கலைக்கழக இணையத்தளத்துக்கு வரும் வெளி இணைப்புக்களையும்;(External Links) உள்ளடக்கியதாக, அவற்றின் உள்ளடக்கங்கள் மெய்நிகர் வாக்கெடுப்பின் மூலம்;(Virtual Referendum) மதிப்பீடு செய்யப்படும்.
OPENNESS (15%) Google Scholar என்ற கல்விசார் இணையத்தேடல் பகுதியின் மூலம், பல்கலைக்கழகம் மேற்கொண்ட, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகளின் கணினிமயப்படுத்தப்பட்ட வடிவங்கள் இந்த மதிப்பீட்டில் உள்ளடக்கப்படும்.
EXCELLENCE(15%) உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்விசார் வெளியீடுகளில் (International Academic Journals) வெளியான பல்கலைகழகத்தின் கல்விசார் ஆய்வுகள்.
(மூலம்: siharam)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.