அப்பிள் பழத்தை பார்க்கும் போதெல்லாம் அதை உண்ண ஆசைப்படுவோம்.
வடிவத்தில் மட்டுமல்லாது, உருசியிலும் அவை சிறப்பு மிக்கவையாகும். தற்போதுள்ள நிலையில் அப்பிள் பழங்களை கண்டவுடன் வாங்கி உண்ண முடியாது.
காரணம், வெளிநாடுகளிலிருந்து வரும் இவ்வாறான அப்பிள் பழங்கள் கெட்டுவிடாதிருக்க பல்வேறு இரசாயன பதார்த்தங்கள் இடப்படுகின்றது. இவை பெரும்பாலும் உடலுக்கு தீங்குவிளைவிப்பனவாக இருக்கின்றன.
அது மட்டுமல்லாது, அவற்றை உற்பத்தி செய்யும் போது, இரசாயன உரங்களும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இவ்வாறான இரசாயன உரங்களை அதில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர் மூலம் அடையாளம் காணலாம் என்பது ஓரளவு நிம்மதியளிக்கின்றது.
இதன்படி ஸ்டிக்கரில் காணப்படும் PLU (Price Look Up) code எனப்படும் இலக்கத்தின் மூலம் அதில் இரசாயன உரங்கள் கலந்துள்ளதா, அது மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என அறிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி,
1. PLU code இல் 4 எண்கள் இருந்தால், அது முழுக்க முழுக்க இரசாயன உரம் கலந்துள்ளது.
2. PLU code ல் 5 இலக்கம் இருந்து, அது 8 இல் ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது.
3. PLU code ல் 5 இலக்கம் இருந்து, அது 9 இல் ஆரம்பித்தால் அது முழுக்க முழுக்க இயற்கை உரம் மூலம் தயாரிக்கப்பட்டது.
என அடையாளம் காணலாம்.
இனி அப்பிள் வாங்கும் போது இவற்றை கருத்தில் கொள்வது சிறந்தது.
ஆனால் வீதியோர கடைகளில் வாங்கும் போது, அப்பிள்களுக்கு அவர்கள் ஸ்டிக்கர்கள் எங்கிருந்து வாங்குகிறார்கள் என கேட்க வேண்டிய நிலையே தற்போது காணப்படுகின்றது.
ஆனால் பல்பொருள் அங்காடிகளில் ஓரளவுக்கு இவற்றை நம்பலாம் எனலாம்.
எனவே நாம் உண்ணும் உணவில் ஓரளவுக்கேனும் கரிசனை எடுப்பதன் மூலம் நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கலாம்.
வருமுன் காப்பதே சிறந்தது. (Prevention is Better Than Cure)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.