உடலும் மனமும் சீராக இருக்கும் குழந்தைகள் தான் முழுமையான ஆரோக்கியமான குழந்தைகளாக பரிணமிப்பார்கள். அந்த வகையில் குழந்தைகளின் மிகச்சிறந்த மனவலிமையை பின்வரும் படி நிலைகளில் பரிசோதித்துப் பார்ப்பது உங்களுக்கு இலகுவானதாக இருக்கும். 01. வளர்ச்சி 02. விருத்தி 03. தேர்ச்சி 04. மகிழ்ச்சி உங்கள் குழந்தைகளும் இந்நான்கு நிலைகளிலும் ஆரோக்கியமாக இருந்தாள் தான் அவர்கள் முழுமையான ஆரோக்கியமான குழந்தைகளாக கருதப்படுவார்கள். அந்த வகையில் குழந்தைகளின் வளர்ச்சி என்பது அவர்களின் உடல் நிறை, சாதாரணமாக நிறைக்கேற்ற உயரம், மண்டையோட்டின் வளர்ச்சி என்பனவற்றை குறிக்கும். எனவே அவர்களுடைய உடல் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியடைந்து செல்கின்றதா என்பதை சரியாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். போஷாக்கான உணவும், அதற்கேற்றவாறு அவர்களில் வெளிபடும் தூண்டுதல்களும் சரியான முறையில் அமைகின்ற போதுதான் குழந்தைகளின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக அமையும்.
-தம்பி
(மூலம்: tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.