முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும்.
தேனும், தினைமாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும். நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவைகள் உருவாகி மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே பெண்கள் எப்பொழுதும் சத்தான உணவுகளை உட்கொண்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.(மூலம்: )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.