......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 8 August 2013

சில இடங்களில் இன்று நோன்பு பெருநாள்

-ஏ.எம்.ஏ.பரீத்

undefinedகிண்ணியா, பேருவளை, ஏறாவூர், கல்முனை உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்களில் ஒரு தொகையினர் புனித  நோன்பு பெருநாளை இன்று வியாழக்கிழமை கொண்டாடுகின்றனர்.

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் நேற்று புதன்கிழமை தென்பட்டவில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை நேற்று புதன்கிழமை இரவு அறிவித்ததுள்ளது. இதற்கிணங்க இலங்கை வாழ் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடுமாறும்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்தது.

இந்த நிலையிலேயே இலங்கை வாழ் முஸ்லிம்களில் ஒரு தொகையினர் இன்று வியாழக்கிழமை கொண்டாடுகின்றனர்.
கிண்ணியாவின் நான்கு பிரதான கிராமங்களில் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நேற்று மாலை தென்பட்டுள்ளதாகவும் கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா அறிவித்துள்ளது.

இதனால் கிண்ணியா பிரதேசத்தில் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுமாறு அறிவித்திருந்தனர். இதனையடுத்து தௌஹீத் ஜமாஅத்தினரும் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுமாறும் அறிவித்திருந்தனர்.

கிண்ணியா பிரதேசத்தில் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை தென்பட்டது தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவிற்கு அறிவித்ததாக கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெயக் வீ.எம்.ஹினாயத்துல்லா (நளீமி) தெரிவித்தார்.

எனினும் இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எவ்வித நடவடிக்கையும் எடுக் வில்லை என அவர் குறிப்பிட்டார். நீண்ட கலந்துரையாடலின் பின்னர் சுமார் நள்ளிரவு 1.30 மணியளவில் கிண்ணியா பிரதேசத்தில் நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கிண்ணியா உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் நோன்பு பெருநாள் தொழுகை இன்று காலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


(மூலம்:http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/78075-2013-08-08-02-37-45.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE