......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 1 August 2013

கடல் எல்லைக்குள் அத்துமீறல் 65 இந்திய மீனவர்கள் கைது

* 09 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டன
* பருத்தித்துறை, முல்லைத்தீவு கடற்பரப்பில் சம்பவம்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 65 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 9 ரோலர் படகுகளும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 34 மீனவர்கள் 5 ரோலர் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருக்கும் அதேநேரம், 31 மீனவர்கள் 4 ரோலர் படகுகளுடன் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கரைக்கு அழைத்துவரப்பட்ட இவர்கள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டனர். பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடமும், முல்லைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையிலும் கையளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பருத்தித்துறை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டவர்களைத் தாம் பொறுப்பேற்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்தார். தென்னிந்தியாவின் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், இவர்களிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எந்தவொரு தரப்பினரின் வேண்டுகோளின் அடிப்படையிலும் விடுவிக்கப்படமாட்டார்கள். இலங்கை சட்டத்துக்கு அமைய கடும் சட்டநடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விடுவிக்கப்படுவார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன ஏற்கனவே கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(மூலம்: )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE