......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 1 August 2013

கொழும்பு தெற்கு துறைமுகம் 5ம் திகதி ஜனாதிபதியினால் திறப்பு

* நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்துசக்தி
* 25,000 வேலைவாய்ப்புகள்
* 25,000 கொள்கலன்களை கையாளும் வசதி

கொழும்பு தெற்கு துறைமுகம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட உள்ளது. இது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய உந்து சக்தியாக அமையுமென துறைமுகங்கள், நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
கொழும்பு தெற்கு துறைமுக விஸ்தரிப்பினூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் 25 ஆயிரம் கொள்கலன் எடுத்துச் செல்லும் பாரிய கப்பல்களும் நங்கூரமிடும் வகையில் கொழும்பு தெற்கு துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பு தெற்கு துறைமுகம் திறக்கப்படுவது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவிய லாளர் மாநாடு துறைமுக அமைச்சில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :- கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு முதற்கட்ட பணிகளுக்கு 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் 300 மில்லியன் டொலர் இங்கு கடனுதவியும் துறைமுக அதிகார சபையின் 100 மில்லியன் டொலரும் இதற்காக பயன்படுத்தப்பட்டது.
6.8 கிலோ மீற்றர் நீளமான பிரதான நீர் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளதோடு, 18 மீற்றர் ஆழத்திற்கு நீரேந்து பரப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தினூடாக குறிப்பிட்டளவே கொள்கலன்களை ஏற்றி இறக்க முடியும். ஆனால், எதிர்வரும் 50 – 60 வருட காலத்தை கருத்திற்கொண்டு தூர நோக்குடனே கொழும்பு தெற்கு துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள பிரதான துறைமுகங்களுடன் போட்டியிடும் வகையில் நவீன வசதிகளுடன் கூடியதாக துறைமுகம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதலீடாகும். உரிய காலத்தில் இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டிருக்காவிட்டால் பாரிய கப்பல்கள் வேறு நாட்டு துறைமுகங்களுக்கே செல்லும். வேறுநாட்டு துறைமுகங்களின் உதவியுடனே பொருட்களை ஏற்றி இறக்க வேண்டி வரும்.
95 வீதமான பொருட்கள் கடல் மார்க்கமாகவே இறக்குமதி செய்யப்படு வதால் பொருட்களின் விலைகளும் உயரும். கடலை நிரப்பியே தெற்கு துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளதோடு, கிழக்கு துறைமுக பணிகளும் ஆரம்பிக் கப்பட்டுள்ளன என்றார்.
துறைமுக அதிகார சபைத் தலைவர் பிரியத் பந்து விக்ரம கூறியதாவது :-
கிழக்கு துறைமுக பணிக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட உள்ளது. மார்ச் மாதத்தில் நிர்மாண பணிகள் நிறைவடையும். துறைமுக அதிகார சபை கடந்த வருடம் 4 பில்லியன் இலாபம் ஈட்டியது. கொள்கலன் ஏற்றி இறக்கும் தொகை அதிகரித்துள்ளது என்றார்.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/08/01/?fn=n13080110 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE