‘சனல்4’ பணிப்பாளர் மெக்ரே கனடாவில் தெரிவிப்பு
கனடாவில் னிo பிirலீ Zonலீ என்ற இந்தத் தொலைக்காட்சி சேவையின் விவரணப் படம் காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இவ்விரு இலங்கைத் தலைவர்களும் யுத்த நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லையென்று கனடாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
எல்.ரி.ரி.ஈ யை ஆதரிக்கும் கனடாவிலுள்ள தமிழர்களின் அமைப்பே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் உலகெங்கிலுமுள்ள எல்.ரி.ரி.ஈ அமைப்பின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டார்கள்.
மலேசியாவில் இந்த விவரணப் படம் காண்பிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டு மக்ரே கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து கனடாவுச் சென்றார். தற்பொழுது எல்.ரி.ரி.ஈ யின் தலைவராகச் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் பிரிட்டனில் இருக்கும் வணக்கத்துக்குரிய பிதா இமானுவேல் விசேட அதிதியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். தன்னை ஒரு சுதந்திரமான ஊடகவியலாளர் என்று காட்டிக்கொள்ளும் மக்ரே, எப்போதும் எல்.ரி.ரி.ஈக்கு ஆதரவாக அவர்களின் டொலர்நோட்டுகளுக்காக இலங்கை அரசாங்கத்தை தான் செல்லும் இடமெல்லாம் கண்டித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இதேவேளை, பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களை மேற்கொண்டதாக விரிவான கடிதமொன்றை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.(மூலம்: http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/07/14/?fn=n1307142 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.