இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்கக் கோரி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் 1974-76-ம் ஆண்டு ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார.
இம் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75025-2013-07-15-07-37-29.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.