இன்று உலகமே “மலாலா” எனும் ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் சிறுமியை பற்றி முனுமுனுத்துக்கொண்டு இருக்கின்றது.
எந்தளவுக்கு என்றால் மலாலா எனும் பெயரில் தனி பரிசில்கள், தனி விசேட தினங்கள், ஐநாவில் விசேட உரைகள், அது மட்டுமல்லாமல் அந்த சிறுமியின் தந்தைக்கு உயரிய பதவிகள் போன்ற அலப்பறைகள் அரங்கேற்றி கொண்டு இருக்கிறது.
ஆனால் இந்த சிறுமியோ அந்தளவுக்கு புகழ் பெற்ற ஒருவரோ, முக்கிய பின்னணி உள்ள ஒருவரோ கிடையாது. அப்படி இருக்கும் போது ஏன் இந்த சிறுமியை பற்றி இவ்வளவு அலப்பறை? நாம் நன்றாக சிந்தித்தால் ஓன்று மட்டும் தெளிவாக தெரியும் அதாவது எல்லாமே இஸ்லாத்திற்கு எதிராக இன்னுமொரு தஸ்லிமா நஸ்ரினையும் , ஒரு சல்மான் ருஸ்தியையும் உருவாக்கும் திட்டமே.
மேற்கத்தையும் இஸ்லாத்தையும் ,முஸ்லிம்களையும் அளிக்க மலாலா எனும் அதி நவீன ஒரு ஆயுதத்தை வருங்காலத்திற்காக தயார் படுத்திக்கொண்டு இருக்கின்றது. இதன் மூலம் இஸ்லாத்தை கொச்சை படுத்த அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்ற ஒரு நல்லாசைதான்.
இந்த சிறுமி பாகிஸ்தானில் வைத்து சுடப்பட்டதாக ஒரு தகவலை உலகம் பூராகவும் மேற்கு பரப்பி விட்டது அதன் உண்மை நிலை அறியாமல் அதையே நமது சில இணையத்தளங்களும் போட்டி போட்டு வெளியிட்டு வந்தது. ஆனால் யார் சுட்டார்கள் என்பது இது வரை விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. சிலர்கள் இந்த சிறுமியை தலிபான்கள் சுட்டார்கள் என்றும், இன்னும் சிலர்கள் அமெரிக்காவே இந்த சிறுமியை hero ஆக்க சுட்டுள்ளது என்றும், இன்னும் சிலர்கள் இந்த சிறுமி சுடப்படவே இல்லை இது ஒரு நாடகம் என்றும் பல வித கருத்துக்கள் உலகில் பரவி காணப்படுகின்றன.
ஆனல் மேற்கு உலகோ இந்த சிறுமியின் சூட்டு நிகழ்வை தலிபான்களோடு சம்பந்தப்படுத்தி அந்த சிறுமியின் உள்ளத்தில் முஸ்லிம் விரோத உணர்வை ஏற்படுத்தி அதை தொடர்ந்தேற்சியாக தக்க வைக்க பல கௌரவ நிகழ்வுகளை அந்த சிறுமிக்காக ஏற்படுத்தி இன்னும் முஸ்லிம் விரோத உணர்வை அதிக படுத்த மும்முரம் காட்டி வருகின்றது. அந்த சிறுமியும் முஸ்லிம்கள் மீது ஒரு விரோத உணர்வு கொண்டவராகவே தென்படுகிறது. இது அந்த சிறுமியின் பேச்சில் நன்றாகவே வெளிப்படுகின்றது. இந்த சிறுமி விடயத்தில் மேற்கு வென்று விட்டது என்றே சொல்ல வேண்டும் .
ஒட்டு மொத்தமாக சொல்லப்போனால் மேற்கு உலகம் இந்த சிறுமியை இஸ்லாத்தை அளிக்க ஒரு அதி நவீன மிக பயங்கர ஆயுதமாக தயாரிப்பதில் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறது.
இந்த சிறுமியின் உள்ளத்தில் அல்லாஹ் இஸ்லாமிய உணர்வை அதிகப்படுத்தி இன்னுமொரு தஸ்லிமா நஸ்ரினோ ,அல்லது சல்மான் ருஸ்தியோ உருவாகாமல் தடுத்து விடுவானாக.(மூலம்: kattankudyinfo.com)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.