......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 22 July 2013

15 ஆயிரம் ரூபாவினால் சம்பளம் அதிகரிக்காவிடின் கிளர்ச்சி வெடிக்கும்: ஜோன் அமரதுங்க

எதிர்­வரும் வரவு - செல­வுத்­ திட்­டத்தில் உழைக்கும் வர்க்­கத்­தி­னரின் ஊதியம் 15,000 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­ப­டா­விட்டால் மத்­திய கிழக்கைப் போன்று நாட்­டுக்குள் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசிய ஊழியர் சங்கத் தலை­வரும் ஐ.தே.க. வின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜோன் அம­ர­துங்க இ.போ.ச. ஊழி­யர்­களின் ஊதி­யத்­தி­லி­ருந்து சேம­லாப நிதிக்கு கழிக்­கப்­படும் தொகை இது­வ­ரையில் இந்த நிதி­யத்தில் வைப்­பி­டப்­ப­ட­வில்லை என்றும் அவர் குற்­றம்­சாட்­டினார்.

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள தேசிய பெருந்­தோட்ட ஊழியர் சங்க மண்­டப கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும்­போதே ஜோன் அம­ர­துங்க எம்.பி. இதனைத் தெரி­வித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
புகை­யி­ரத சேவை ஊழி­யர்கள் மற்றும் தனியார் பஸ்­போக்­கு­வ­ரத்துச் சங்க ஊழி­யர்கள் என கடந்த வாரத்தில் தமது உரி­மை­க­ளுக்­காக தொழிற்­சங்கப் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர். ஆனால், இப்­போ­ராட்­டங்­களை அவர்­களால் தொடர முடி­ய­வில்லை. அர­சாங்­கத்தின் அச்­சு­றுத்தல், அழுத்தம் கார­ண­மாக தொழிற்­சங்கப் போராட்­டங்­களை கைவிட்­டனர்.
அதன் பின்னர் அவ் ஊழி­யர்­க­ளுக்கு அர­சாங்­கத்தால் வழங்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அன்று சந்­தி­ரி­காவின் ஆட்­சியில் தொழில் அமைச்­ச­ராக இருந்­த­போது தொழி­லா­ளர்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்தார்.
தொழி­லாளர் பிர­க­ட­னத்தை கொண்டு வந்தார். ஆனால், அதனை நிறை­வேற்ற முடி­யாமல் போனது.
அதே­போன்று மஹிந்த சிந்­த­னை­யிலும் உழைக்கும் வர்க்­கத்­தி­னரின் உரி­மை­களை பாது­காப்­ப­தாக உறு­தி­ய­ளித்தார். ஆனால், இன்று பதவி வந்­ததும் அனைத்­தையும் மறந்­து­விட்டார்.

ஊழி­யர்­களின் போராட்­டங்­க­ளுக்கு எதி­ராக அடக்­கு­முறை பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. உரி­மைகள் பறிக்­கப்­ப­டு­கின்­றன. அச்­சு­றுத்­தல்கள், அழுத்­தங்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றன. இந்­நிலை தொட­ரு­மானால் எதிர்­கா­லத்தில் மாபெரும் தொழிற்­சங்கப் போராட்டம் வெடிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.



(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=6050 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE