......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 17 July 2013

இந்தியாவின் தலையீட்டையடுத்து அரசின் அடிவருடிகளின் வாய் அடைத்துப்போயுள்ளது : விக்கிரமபாகு

மாகாணசபை முறைமை ஒழிப்பு தொடர்பில் பல கருத்துக்களை வெளியிட்டுவந்த அரசின் அடிவருடிகள் இந்தியாவின் தலையீட்டை அடுத்து தற்போது வாயடைத்துப் போயுள்ளன என நவசமச மாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாணசபை முறைமையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாது 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலேயே வடக்குத் தேர்தலை நடத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது எமக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்நிலையில் 13 ஆவது திருத்தத்துடன் வடக்குத் தேர்தல் இடம்பெற்றால் நாடு பிளவுபடும், இரண்டாவது ஈழத்திற்கு வழிவகுக்கும் என கூக்குரல் இட்ட அரசின் அடிவருடிகள் அமைதியாகிவிட்டனர்.
இந்திய தலைவர்கள் இலங்கைவந்து பேச்சுவார்தை நடத்திவிட்டுப்போனவுடன் அவர்களின் செயற்பாடுகள் செயலிழந்து விட்டன.
தற்போது அரச அதிகாரிகள் எல்லோரும் அரசியல் பேச ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். உண்மையில் இது நல்லவிடயம் தான்.

ஆனால் எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டையொட்டியும் பிரித்தானியா மற்றும் உலக நாடுகளின் அழுத்தத்தின் அடிப்படையிலுமே இவ்வாறான நாடகங்கள் இடம்பெறுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.



(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5937 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE