......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 9 July 2013

இந்தோனேசியாவில் புலிகளிடமிருந்து தப்பிக்க மரத்தில் நாட்களைக் கழிக்கும் நபர்கள்

இந்தோனேசியாவில் புலிகளிடம் இருந்து தப்பிக்க 5 பேர் 3 நாட்களை மரத்திலேயே கழித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் சிம்பங்க் கிரியைச் சேர்ந்த 6 பேர் குனுங் லூசர் தேசிய பூங்காவில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள் நுழைந்தனர்.
அவர்கள் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த மரக்கட்டைகளை பொறுக்க காட்டுக்குள் சென்றனர்.
அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக ஒரு புலிக்குட்டியை கொன்றுவிட்டனர். இதை பார்த்த புலிகள் ஆவேசமடைந்து அவர்களை தாக்க வந்ததுள்ளன.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மீதமுள்ள 5 பேரும் ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறி தப்பித்துள்ளனர்.
அவர்கள் தங்கள் கையடக்கத்தொலைபேசி மூலம் தங்களை காப்பாற்றுமாறு தகவல் அனுப்பினர். இதையடுத்து கடந்த சனிக்கிழமை சுமார் 30 பேர் அவர்களை காப்பாற்ற காட்டுக்குள் சென்றனர்.
அவர்களால் 4 புலிகளை மட்டுமே விரட்ட முடிந்தது. ஆனால் அவர் இருக்கும் பகுதியை மீட்பு படையினர் அடையவே 2 முதல் 3 நாட்கள் ஆகும்.

அவர்கள் செல்லும்வரையில் அந்த மரத்திற்கு கீழ் புலிகள் இருந்தால் அவற்றுக்கு மயக்க ஊசி போட்டு தான் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=776 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE