* 2வது அமர்வு 26ம் திகதி
* 6மாத காலத்தினுள் அறிக்கை சமர்ப்பிப்பு
* 6மாத காலத்தினுள் அறிக்கை சமர்ப்பிப்பு
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு நேற்று (9) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த அமர்வில் ஆளும் தரப்பு சார்பாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பங்கேற்றதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு பிற்பகல் 3.00 மணி முதல் 4. மணி வரை இடம்பெற்றது.
இதன் போது, தெரிவுக்குழுவின் பொறுப்பு குறித்தும் இதனூடாக முன்னெடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் அதன் பணிகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டதாக அறிய வருகிறது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஆளும் தரப்பு சார்பாக 19பேரும் எதிர்தரப்பு சார்பாக 12 பேரும் நியமிக் கப்படுவதாக சபாநாயகர் அறிவித்திருந்தார். ஆனால், ஆளும் தரப்பு உறுப்பினர்களின் பெயர்கள் மட்டுமே சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருந்தன. எதிர்க்கட்சி சார்பில் எந்தப் பிரதிநிதியும் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் பாராளுமன்ற வட்டாரங்கள் கூறின.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் இரண்டாவது அமர்வு 26ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற உள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு 6 மாத காலத்தில் தனது அறிக்கையை சபாநாயகருக்கு கையளிக்க வேண்டு மென குழுத் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
தேவைப்பட்டால் சபாநாயகரின் அனு மதியுடன் மேலதிக கால அவகாசம் பெறமுடியும் என்றும் அவர் குறிப் பிட்டார்.
13ஆவது திருத்தம் உட்பட தேசிய பிரச்சினை உடன் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து தெரிவுக் குழுவில் ஆராயப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/10/?fn=n1307103 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.