எனினும் ஹிஸ்புல்லாஹ்வை தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 அங்கத்துவ நாடுகளும் இணங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இதில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளர்களின் செயற்பாடுகள் சட்டவிரோதமாக அமையும். குறிப்பாக ஐரோப்பாவில் இருந்து ஹிஸ்புல்லாஹ்வுக்கு கிடைக்கப்பெறும் நிதி உதவிகள் தடை செய்யப்படும்.
எனினும் இந்த விடயத்தில் ஒருசில ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு ஈடுபாடு இல்லை என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ஆயுதப் பிரிவையே தீவிரவாத பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசிக்கவுள்ளது. எனினும் அதனது அரசியல் பிரிவு லெபனானில் பலம்வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அது லெபனான் அரசின் பங்குதாரராகவும் உள்ளது. இந்நிலையில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக செயற்படக் கூடாது என லெபனான் அரசு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளது. ஹிஸ்புல்லாஹ் தமது சமூகத்தின் ஓர் அங்கம் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.
எனினும் ஹிஸ்புல் லாஹ் அமைப்பு சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக தலையிட்டுள்ளமை ஐரோப்பிய ஒன்றியம் அதன்மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தூண்டியிருப்பதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தடையுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/23/?fn=w1307236 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.