......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 1 July 2013

வடக்கு தேர்தல் உறுதியை நாட்டு மக்களுக்கே வழங்கினேன்; சர்வதேசத்துக்கு அல்ல: ஜனாதிபதி

'வட மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படும். இதற்கான உறுதியினை நான் எமது மக்களுக்கே வழங்கியுள்ளேன். சர்வதேசத்துக்கு அல்ல' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

சீசெல்ஸுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி ஜேம்ஸ் மிஷெல்க்கும் இடையில் ராஜதந்திர சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. தொழிற்பயிற்சி, இளைஞர் அபிவிருத்திக்கான புரிந்துணர்வுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு உடன்பாடு போன்ற மூன்று விடயங்களை உள்ளடக்கிய ஒப்பந்தங்களே இதன்போது கைச்சாத்திடப்பட்டன.
 
சிசெல்ஸ் அரச மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு' என்று சிசெல்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன், சிசெல்ஸ்க்கு வருகை தந்த இலங்கையின் முதல் ஜனாதிபதி என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதனையடுத்து, இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிசெல்ஸ் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினார். யுத்தத்துக்கு பின்னர் வடக்கின் அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கம் 300 கோடி டொலர்களை செலவளித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

'வட மாகாணசபைத் தேர்தல் இவ்வருடம் நடத்தப்படவுள்ளது. இதற்கான உறுதியினை நான் எமது மக்களுக்கே வழங்கியுள்ளேன். சர்வதேசத்துக்கு அல்ல' என்றும் ஜனாதிபதி இதன்போது எடுத்துக் கூறினார். 


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/73035-2013-06-30-13-47-57.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE