ஜனாதிபதியை பணயக் கைதியாக்க சில சக்திகள் முயற்சிக்கின்ற என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த சக்திகளே மக்களின் உணர்வுகளை தூண்டி அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றன என அவர் குறிப்பிட்டார். கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"நாட்டின் அரசியல் களம் இன்று ஒரு வகையாக சூடு பிடித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் என்ன தீர்மானம் எடுக்கப் போகின்றது என்பது சம்பந்தமாக பலர் கேள்வி எழுப்புகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகி இவைகளுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்றும் சிலர் எதிர்பார்க்கினறனர்.
முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் தனித்துவமான ஒரு கட்சி. அரசாங்கத்துடன் இணைந்திருந்தாலும் அதன் தனித்துவத்தை ஒருபோதும் கைவிடாது. அதே பால் எங்களுக்கு அரசை வலுவிளக்க செய்யும் நோக்கமும் கிடையாது. 13ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக இன்று பரவலாக பேசப்படுகிறது.
13ஐ பற்றி பேசுவதற்கு முன் 1956ஆம் ஆண்டிலிருந்து சிறுபான்மை மக்கள் நடத்திய போராட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.
1956ஆம் ஆண்டு சிங்களத்தை தேசிய மொழியாக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் சுமார் 30 வருடங்கள் தமிழ் மொழிக்கும் சம அநதஸ்து கோரி தமிழ் பேசும் மக்கள் போராடினர்.
தமிழ் மொழிக்கு சம உரிமை கிடைத்து இன்றைக்கு 30 வருடங்களாகி விட்டது. அப்படி இருந்தும் இன்றும் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைக்க கூடாது என்று கூறுபவர்களும் இருக்கின்றனர்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டதன் காரணமாக சிங்கள மக்களை விட பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்.
அதற்கு எதிராக முதலில் பேசியவர் மர்ஹும் அஷ்ரபாகும். இரண்டு மாகாணங்களை இணைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது. நாடாளுமன்றம் எப்போதும் சிங்கள உறுப்பினர்களை பெரும்பான்மையை கொண்டதாகவே அமையும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
அவ்வாறு இருக்கையில் போலி காரணங்களை காட்டி மக்களின் உனர்வுகளை தூண்டி அரசியல் இலாபம் பெற முயறசிக்கும் சக்திகள் சம்பந்தமாக அவதானத்துடன் இருக்க வேண்டும். நாங்கள் அரசாங்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். அப்படி வெளியே வர முடியாது. வெளியே கடும் மழை பெய்கிறது மழையில் நனைய முடியாது.
எங்கேயாவது ஒதுங்க வேண்டும். எங்கே ஒதுங்குவது எல்லா வீடுகளது கூறைகளும் ஓட்டையாக ஒள்ளது.
அரசியல் யாப்பில் 13ஆம் திருத்தம் சம்பந்தமாக போலிப் பயமே இருக்கின்றது. இதற்காக ஒரு தெரிவுக்குழுவை அமைத்துள்ளார்கள்.
பிரதான எதிர்கட்சி இல்லாத, தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாத, மக்கள் விடுதலை முன்னனி இல்லாத, முஸ்லிம் காங்கிரஸ் இல்லாத தெரிவுக்குழுவின் அறிக்கை குப்பைத்தொட்டிக்கே பொருத்தமானதாக இருக்கும்" என்றார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/73019-2013-06-30-11-03-45.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.