......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 22 July 2013

ஈராக்கில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 75 பேர் பலி

ஈராக் தலைநகர் பக்தாத் மற்றும் ஏனைய நகரங்களில் இடம் பெற்ற கார் குண்டு தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

பக்தாதின் ஷியா பிரிவினர் வாழும் பகுதியில் நேற்று முன்தினம் கார் குண்டுகள் மற்றும் பாதையோர குண்டுகள் என 12 குண்டு தாக்குதல்கள் இடம் பெற்றன. நோன்பு நேரம் அல்லது இப்தார் நிகழ்வுகளின் போது இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்புகளில் குறைந்தது 65 பேர் கொல்லப்பட்டனர்.
200 பேரளவில் காயமடைந்தனர். முன்னதாக சனிக்கிழமை காலை ஆயுத தாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அல் கொய்தா எதிர்ப்பு குழுவான சஹ்வாவின் தலைவர் பஸ்ஸம் மஹ்மூத் மற்றும் அவரது இரு மெய்ப்பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர். தலைநகரின் டியாலா மாகாணத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றது.
பக்தாதின் தென் மேற்காக 20 கிலோ மீற்றருக்கு அப்பாலிருக்கும் படைன் பகுதியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் ஐவர் கொல்லப்பட்டனர். வடக்கு நகரான மசூலில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் 25 பேர் காயமடைந்தனர். கடந்த மூன்று மாதங்களில் இடம் பெற்ற வன்முறைகளில் ஈராக்கில் 2,500 பேரளவில் கொல்லப்பட்டிருப்பதாக ஐ. நா. அறிக்கை குறிப்பிட்டுள்ளது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/22/?fn=w1307225 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE