......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 17 July 2013

25 நாட்கள் வேலை வழங்கவும்: தொண்டமான்

பெருந்தோட்டங்களில் கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைவாக தொழிலாளர்களுக்கு 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வேலை வழங்கப்படாதவிடத்தில் அந்த 25 நாட்களுக்குரிய சம்பளத்தை மாத முற்பணமாக அந்தந்த மாதத்தில் வழங்குமாறு தோட்டக் கம்பனிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து இ.தொ.கா ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற் சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைவாக, தோட்டத் தொழிலாளர்களின் வேலைப்பளுக்களை கூட்டுவதும், வேலை நாட்களைக் குறைப்பதும் இவ்வொப்பந்தத்திற்கு மாறாக அமைகின்றது என தெரிவிக்கப்பட்டது. 

இதேவேளை வாழ்வாதாரப் பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடைமழை ஆகியவற்றாலும், வேலைநாட்கள் குறைக்கப்படுகின்றன.

இதனால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து எதிர்பார்க்கப்பட்ட சம்பளத் தொகையை அடைய முடியாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மலையகம் எங்கும், சீரற்ற காலநிலையால் பாதிப்புக்கள் நிலவுகின்றது. அவைகளைக் கருத்தில் கொண்டு தோட்டக் கம்பனிகள் விடுபட்ட நாட்களுக்குரிய சம்பளத்தை முற்பணமாக  வழங்க வேண்டும். 

இதனை அடுத்தடுத்த மாதங்களில் வேலை செய்யும் நாட்களை கணக்கிலிட்டு, அதற்கேற்றவாறு ஒரு குறிப்பிட்ட தொகையை அறவீடு செய்து கொள்ள முடியும். 

இதேவேளை வருடாந்த விடுமுறை நாட்களை மாதாந்தம் இரண்டு நாட்கள் வீதம் கழித்துக் கொள்ளவும் முடியும்' என நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் இ.தொ.கா பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வேலாயுதம், பெருந்தோட்ட கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன், இ.தொ.கா உப தலைவர்கள், இ.தொ.கா நிர்வாக செயலாளர் வெ.ஜீவானந்தராஜா, மற்றும் மாவட்டத் தலைவர், பிராந்திய இயக்குனர்கள், மாவட்ட, மாநிலப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/75251-25-.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE