......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 2 July 2013

அமெரிக்கக் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிVலிருந்து 130 கிலோ மீற்றர் தொலைவில் பரவிய இந்தத் தீ அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படை வீரர்கள் போராடினார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் ஒரே சம்பவத்தில் அதிகளவில் தீயணைப்புப் படைவீரர்கள் பலியாகியுள்ள சம்பவம் இதுவென்றே கருதப்படுகிறது.
கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரலிப்பு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.
அதிக வெப்பம் காரணமாக உள்ளூர்வாசிகள் எல்லோரும் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
இப்போது சுமார் 1000 ஏக்கர் அளவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 200 பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
1933 ஆம் ஆண்டில் லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்படட காட்டுத் தீயில் 25 தீயணைப்புப் படைவீரர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


(மூலம்: http://www.thinakaran.lk/2013/07/02/?fn=w1307028 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE