......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 26 June 2013

ரகசிய வாக்குமூலத்தை சி.ஐ.டி.யிக்கு வழங்க நீதவான் மறுப்பு - See more at: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/72319-2013-06-25-12-21-53.html#sthash.z77ZWAun.dpuf

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் நீதவானின் அறையில் வைத்து ரகசிய வாக்குமூலங்களை நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கினர்.
அந்த வாக்குமூலத்தின் பிரதிகளை குற்றப்புலானாய்வு பிரிவு பொலிஸார் நீதவானிடம் கோரிநின்ற போதிலும் அதனை வழங்குவதற்கு நீதவான் மறுத்துவிட்டார். பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.சஹாப்தீன் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு வாகனங்கள், கையடக்கதொலைபேசி, தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சுத்தியல்,குறடு மற்றும் துப்பாக்கிகள் இரண்டு ஆகியவற்றை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் கோரி நின்றனர். அந்த கோரிக்கைக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.சஹாப்தீன் அனுமதியளித்தார். அத்துடன் வாகனமொன்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்த கறையும் டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றத்தினால் அனுமதியளிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதான சந்தேகநபரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி தொலைபேசியூடாக சாட்சிகள் இருவரை 25 தடவைகள் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டுஅச்சுறுத்தியதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இதனையடுத்து அவருக்கு அழைப்பாணை விடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சந்தேகநபர்களினால் வழங்கப்பட்ட  இரகசிய வாக்குமூலங்களை முறைப்பாட்டாளருக்கு வழங்குவது பிரதிவாதிக்கு பிரச்சினையாக அமையலாம் என்று சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனையடுத்து முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை தொடர்பில் அவருடைய நண்பர் , நான்கு பொலிஸார் உள்ளிட்ட அறுவர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

(மூலம்:   http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/72319-2013-06-25-12-21-53.html#sthash.z77ZWAun.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE