'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை துரும்பாகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் தற்போதைய அரசாங்கத்தையும் பிரிப்பதற்காக அரசாங்க தரப்பு அமைச்சர்கள் சிலரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தூண்டிவிடுகிறார்' என்று அமைச்சர் விமல் வீரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாகப் பிரிப்பதன் மூலம் மகன் விமுக்தி குமாரதுங்கவைக் கொண்டு அரசியல் நடத்துவதற்காக சந்திரிக்கா முயற்சி செய்து வருகின்றார் எனவும் அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டார்.
இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,
'இலங்கை - இந்தியாவுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடும் விடயத்துக்கு எதிராக இருந்தவர்கள் இப்;பொழுது அதற்கு ஆதராவாக பேசுகின்றனர். அமைச்சர்களான ராஜித்த மற்றும் ரெஜினோல்ட் குரே போன்றோர்கள் சந்திரிகாவின் கணவரின் கட்சியான மஹஜன கட்சியில் இருந்தவர்கள். அவர்கள் அன்றும் ஆதரவாக இருந்தார்கள் இன்றும் ஆதரவாகப் பேசுகின்றனர்.
ஆனால் செப்டம்பரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட மாகாணத்தில் ஆட்சி செய்வதற்கு முன்னர் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் அகற்றப்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டிலேயே எமது கட்சி உள்ளது. அத்துடன், வடக்கில் எமது கட்சி போட்டியிடுவதில்லை என்ற தீர்மானத்திலும் எமது கட்சி உறுதியாக உள்ளது' என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
'இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை முதலில் மீறியது இந்தியாவே. ஒப்பந்தம் கைச்சாத்திட்டால் விடுதலைப் புலிகள் ஆயுதத்தை கீழே வைப்பார்கள் என்று சொல்லி இந்தியா மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
'ஐக்கிய தேசிய கட்சியானது எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து அரசியல் செய்யும் தீர்மானத்திலேயே உள்ளது. அதனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக ஐ.தே.க. செயற்படுகின்றது' என்றும் அவர் குறிப்பிட்டார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/72477-2013-06-26-11-41-16.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.