இஸ்லாமிய வழிமுறைகளை கற்பித்து சிறுவயதிலிருந்தே ஒழுக்க விழுமியங்களோடு வாழ்வதற்கு கற்பிக்கும் புனிதமான இடமே மத்ரஸாவாகும். இதற்கு முஸ்லிம் அடிப்படைவாத முத்திரை குத்தும் பொது பலசோனாவின் கடும் போக்கு மதவாதத்தை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கண்டிப்பதோடு நிராகரிக்கின்றேன் என மேல் மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்த பின்னர் இனங்களிடையே மதங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதை விடுத்து குரோதத்தை விதைக்கும் கடும் போக்கு சக்திகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உறுப்பினர் பைரூஸ் ஹாஜி மேலும் தெரிவித்திருப்பதாவது,
மத்ரஸாக்கள் புனிதமான பணியையே மேற்கொள்கின்றது. ஆனால் அங்கு சூறா அமைப்புடன் இணைந்து முஸ்லிம் பயங்கரவாதம் போதிக்கப்படுவதாக பொது பலசேனா தெரிவித்துள்ளமையானது இஸ்லாத்தின் புனிதத்துவத்திற்கு களங்கமாகும்.
சூறா என்பது முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்கும் உலகளாவிய அமைப்புக்களின் ஒன்றியமே தவிர பயங்கரவாத அமைப்பல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதனை அறியாது மதவாதத்தை தூண்டிவிடுவது நாட்டுக்கு நல்லதல்ல.
(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5105 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.