......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Sunday, 16 June 2013

ஆசிரியை முழந்தாளிடவைத்த மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

-எஸ்.எம்.மும்தாஜ்
 
நவகத்தேகம இசுறு பாடசாலையின் ஆசிரியை ஒருவரை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாணசபை உறுப்பினர் சரத்குமாரவை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் எம்.இக்பால் உத்தரவிட்டுள்ளார். இன்று பிற்பகல் குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினரை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
நேற்று வெள்ளிக்கிழமை பகல் நவகத்தேகம இசுறு பாடசாலையில் கல்வி போதிக்கும் ஆசிரியை ஒருவரையே குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் பாடசாலையினுள் முழந்தாளிட வைத்துள்ளார். நேற்று பாடசாலைக்குச் சென்று வடமேல் மாகாணசபை உறுப்பினரின் மகள் அணிந்திருந்த சீறுடை கட்டையாக இருந்ததினால் பாசடாலை ஒழுக்காற்று குழு உறுப்பினராக ஆசிரியை அம்மாணவியை எச்சரித்துள்ளதாகவும், இதனை அம்மாணவி தன் தந்தையிடம் தெரிவித்ததையடுத்து பாடசாலைக்குச் சென்றுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் குறித்த ஆசிரியையை ஏசி, எச்சரித்து பின்னர் முழந்தாளிட வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
பின்னர் குறித்த ஆசிரியை இது தொடர்பில் நவகத்தேகம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து இன்று சனிக்கிழமை காலை குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் நவகத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
 
இச்சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/71009-2013-06-15-15-03-55.html )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE