முஸ்லிம் அடக்கஸ்தலத்தில் புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ள தரையை தோண்டிய போது இந்த கொடூர புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மேற்படி அடக்கஸ்தல அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலஸ்தீன நகரான ஜப்பா 1948 இல் இஸ்ரேல் இராணுவம் மற்றும் வலது சாரி யூத ஆயுதக் குழுக்களிடம் வீழ்ந்த போது பலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஜப்பா குடியிருப்பாளரும் வரலாற்றிய லாளருமான மஹ்மூத் ஒலைத் "அஸ்ஸப்ரி" நாளிதழுக்கு அளித்த தகவலில் "நாம் ஆறு பாரிய மனித புதைகுழிகளை கண்டு பிடித்தோம். இதில் இரண்டு புதைகுழிகளை தோண்டி வெளிக் கொணர்ந்தோம்.
அவைகளில் சுமார் 200 உடல்கள் உள்ளன. ஏனைய புதைகுழிகளிலும் மேலும் பல உடல்கள் உள்ளன. இதில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என பல வயதுடையவர்களின் உடல்கள் காணப்படு கின்றன. ஒரு சில உடல்களில் துன்புறுத்த லுக்கு உள்ளானதன் அடையாளமும் தென்படுகிறது" என்றார்.
எனினும் தற்போது 80 வயதாகும் உள்ளூர் மீனவரான அதார் சைனப் 1948 யுத்தத்தின் போது தனது இளமைக் காலத்தில் இருந்தார். அப்போது தாமே தெற்கு ஜப்பா பகுதியில் பல பலஸ்தீனர்களின் உடல்களை சேகரித்ததாக குறிப்பிட்டுள்ளார். அவை அடக்கஸ்தலத்தில் விரைவாக புதைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"குறித்த காலத்தின் நான்கு மாத காலத்திற்குள் சுமார் 60 உடல்களை அடக்கஸ்தலத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன்" என சைனப் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கூறினார். "வீதிகளில் சிதறிக் கிடந்த உடல்களை நாம் அடக் கஸ்தலத்திற்கு கொண்டு சென்றிருக் கிறோம். அவர்கள் யாரென்று கூட தெரியாது. ஒரு இரவு அல்லது பகல் வேளையில் தொழுகை கூட நடத்தாமல் ஆண், பெண் சிறுவர்கள் என அனைவரது உடலையும் ஒரே இடத்தில் குவித்து புதைத்தோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜப்பா பகுதி இஸ்ரேலின் தலைநகராக செயற்படும் டெல் அவிவுடன் 1950 ம் ஆண்டு இணைக்கப்பட்டது. இங்கு அரபு, யூத இனங்கள் கலந்து வாழ் கின்றன. 1948 இஸ்ரேல் - அரபு யுத் தத்தின் போது சுமார் 760,000 பலஸ்தீ னர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/03/?fn=w1306032 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.