டெங்கு நோயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் பொறுப்பை அரசாங் கமோ, உள்ளூராட்சி மன்றங்களோ அல்லது குடும்பத் தலைவர்களோ மாத்திரம் ஏற்றுக் கொள்ள முடியாது. டெங்கு நோய் என்பது தேசத்தை எதிர்நோக்கியிருக்கும் பாரிய அழிவை ஏற் படுத்தும் ஒரு நோயாகும். இதனை அனைவரும் ஒன்றிணைந்து ஒழித்துக் கட்டுவதன் மூலமே நம் நாட்டு மக்கள் நோயின்றி நிம்மதியாக வாழ்வ தற்கான உத்தரவாதத்தை அளிக்க முடியும்.
அரசாங்கம், உள்ளூராட்சி மன்றங்கள், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் இவர்கள் எல்லோ ரையும்விட டெங்கு நோயை பூண்டோடு அழித்து விடும் பொறுப்பை மாணவ, மாணவியர் ஏற்றுக் கொண்டால் நிச்சயம் இம்முயற்சி மாபெரும் வெற் றியை அளிக்குமென்று அனுபவம் மிக்க கல்விமான்கள் கருதுகிறார்கள்.
பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளின் கல்வி கற்கும் நேரசூசியில் ஒவ்வொரு நாளும் 40 நிமிடங் களை அப்பாடசாலையின் சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதற்காக ஒவ்வொரு வகுப்புக்கும் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படும். எனவே, பாடசாலை பிள் ளைகள் தங்களுக்கு ஒதுக்கப்படும் 40 நிமிடங்களில் பாடசாலையில் எந்தெந்தப் பகுதிகளை தாங்கள் சுத்தப்படுத்துவதென்று முன்கூட்டியே மற்ற வகுப்பு பிள்ளைகளுடன் கூடிப்பேசி முடிவெடுக்க வேண் டும்.
இந்தப் பிள்ளைகளுக்கு சில நாட்களில் பாட சாலைகளின் பிரதான வாயிலையும் அதனைச் சார்ந்த பகுதிகளையும் சுத்தம் செய்யும் பொறுப்பு கொடுக் கப்படும். சிலருக்கு பாடசாலையின் சிற்றுண்டிச் சாலை மற்றும் சமையலறைப் பகுதியை சுத்தம் செய்யும் பொறுப்பு கொடுக்கப்படும். இதுபோன்று பாடசாலைப் பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் தங்கள் பாடசாலையில் சகல பகுதிகளிலும் நுளம்பு இனவிருத்தி செய்யும் சாதகமான இடங்கள் இருப் பின் அவற்றை முற்றாக அழித்துவிட வேண்டும்.
பொதுவாக டெங்கு நோய் பாடசாலைகளில் இருந்தே அதிகமாக பரவுகின்றது. காரணம் அங்கு இரவு நேரத்தில் எவரும் நுளம்பை அழித்துவிடு வதற்கான செயற்பாடுகளை எடுக்காதிருப்பதும், அவற்றுக்கு நிம்மதியாக இருந்து இனவிருத்தி செய் வதற்கான சாதகமான சுற்றாடலும் அங்கிருப்ப தேயாகும்.
சகல பாடசாலை பிள்ளைகளும் டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை அழிக்கக்கூடிய வகையில் தங்கள் பாடசாலை சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்தால் இலங்கையில் உள்ள நுளம்புகளில் சுமார் 75சதவீதத்தை நாம் முற்றாக அழித்து விடலாம்.
அடுத்ததாக எமது பிள்ளைகள் தங்கள் வீட்டின் சுற் றாடலையும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் சுத்த மாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனையும் அவர்கள் ஒரு சமூகப் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு செய்வார்களேயானால் நுளம்புகளின் இனவிருத் தியை பெருமளவில் கட்டுப்படுத்தக்கூடியதாக இரு க்கும்.
கல்வி அமைச்சு தற்போது விடுத்துள்ள புதிய விதிமுறைகளின்படி ஒரு பாடசாலையின் 150 மீற்றர் சுற்றுவட்டத்தை டெங்கு நோய் பரவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அசுத்தமாக வைத்தி ருக்காமல் அவற்றை ஒட்டுமொத்தமாக சுத்தப்படுத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறது. கல்வி அமை ச்சின் இந்த புதிய விதிமுறைக்கு ஒரு காரணம் இருக்கிறது. கொழும்பு மாவட்டத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் உள்ள டெங்கு நோயாளிகளில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாடசாலை பிள்ளை களாவர்.
டெங்கு நுளம்பு எவ்விதம் பிள்ளைகளை துன் புறுத்துகின்றது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமாயின் உங்கள் மகன், மகள்மாரின் வெள்ளை ஆடைகளை சற்று அவதானமாக பரி சீலித்து பார்த்தால், அவற்றில் இரத்தக்கறைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதிலிருந்து நுளம்புக்கடியை தாங்க முடியாமல் பிள்ளைகளை கடிக்குமிடத்தில் அடிக்கும் போது இரத்தம் உறிஞ்சும் அந்த நுளம்புகளின் உடம்பில் இருந்து வெளியேறும் இரத்தக்கறைகள் தான் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
டெங்கு நோயை பரப்பும் நுளம்புகள் நாளொன்று க்கு 10 தடவைக்கு மேல் மனிதர்களின் உடம்பைத் தாக்கி இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிறதென்று சமீப த்தில் நடத்திய ஆய்வுகளில் இருந்து தெரியவந்து ள்ளது.
இதே வேளையில் டெங்கு நோய்த் தொல்லையில் இருந்து எங்கள் பிள்ளைகளின் உயிரை காப்பாற்று வதற்காக சுகாதார அமைச்சு 10 வைத்திய நிபுணர் களை தாய்லாந்துக்கு அனுப்பி டெங்கு நோய் சிகிச்சை தொடர்பாக அவர்களுக்கு விசேட பயிற் சியை பெற்றுக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
டெங்கு நோய் எந்த நேரத்திலும் எவரையும் தாக்கி மரணிக்கச் செய்யும் ஒரு கொடிய நோயாகும். இதனை நாம் ஒரு தற்கொலை குண்டுதாரி என்று கூட அழைக்கலாம்.
எங்களுடன் முதல் நாள் அமர்ந்து நீண்ட நேரம் உரையாடிய நண்பர் ஒருவர் மறுநாள் டெங்கு நோயி னால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின்னர் ஓரிரு நாளில் மரணிக்கும் வேதனையையும் நாம் பார்க்கிறோம்.
எனவே, டெங்கு நோய் எவரையும் எந்நேரத்திலும் தாக்கி மரணிக்கச் செய்யும் அளவுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனால் நாம் எங்களையும், எங்கள் குடும்பத்தவரையும், சுற்றத்தா ரையும் பாதுகாக்க வேண்டுமாயின் நோய் இன விருத்தி செய்யும் இடங்களை தேடிச் சென்று அவற்றை முற்றாக அழித்துவிடுவது எமது சமூகப் பொறுப்புஎன்பதை மனதில் கொண்டு செயற்படுவது அவசியமாகும்.(மூலம்: http://www.thinakaran.lk/Vaaramanjari/2013/06/09/?fn=e130609 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.