......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 15 June 2013

'இலவச கல்வி இல்லாவிட்டால் உயர்கல்வி அமைச்சர் விவசாயியாக இருந்திருப்பார்'

இலங்கையில் இலவச கல்வி என்பது நடைமுறையில் இல்லாமிலிருந்திருந்தால் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விவசாயியாகவே இருந்திருப்பார்' என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இலவச கல்வி இல்லையென்றால் கல்வி அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோரது கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் சென்றிருக்கும். இலவச கல்வி  என்பது இருப்பதால்தான் அவர்கள் இன்று ஒரு அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்றும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினரின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது  மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'இவ்வாறானவர்கள் இன்று இலவசமாக பெற்றுகொள்ளும் கல்விசார் பட்டங்களை 150,000 ரூபாய்க்கு விற்பவர்களாக உள்ளனர். இதனூடாக இன்று இலவச கல்வி என்பது அழிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இலவச கல்வியை நடைமுறையில் இல்லாமல் செய்யும் முயற்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த 214 பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழகங்களிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்'  என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.


(மூலம்:  http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/70779-2013-06-14-04-04-13.html#sthash.Vm6shiwe.dpuf )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE