பழுலுல்லாஹ் பர்ஹான்:
புலிகளினால் கொடுரமாக தாக்குதல் நடாத்தப்பட்ட தடயங்கள் இதுவரையில் புனரமைக்கப்பட்டாமல் இருக்கின்ற நிலையில், அதை பார்ப்பதற்கு இன்னும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் அன்னிய மதத்தவர்களும் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்து அத்தாட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
தற்போது குறித்த காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் புனர் நிர்மானம் செய்யப்பட்டு வருவது தொடர்பில் எமது செய்தியாளர் அப்பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் சுபைர் ஸி.ஸி.யை தொடர்பு கொண்டு கேட்ட போது அதற்கு கருத்து தெரிவித்த பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் பள்ளிவாயலில் இருக்கும் தாக்குதல் நடாத்தப்பட்ட தடயங்கள் ஒரு போதும் புனர் நிர்மானம் செய்யப்படாதென்றும், அதைத் தவிர ஏனைய பகுதிகள் மாத்திரம் புனர் நிர்மாணம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
(மூலம்: http://zajilfm.com/~zajilnew/index.php/using-joomla/extensions/components/content-component/article-categories/81-demo/news/top-news/2870-2013-06-03-18-37-26 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.