ரஷ்யாவில் உள்ள சிறை ஒன்றுக்குள் கையடக்கத்தொலைபேசியை கடத்திச் சென்ற பூனை பிடிபட்டுள்ளது.
ரஷ்யாவின் கோமி மாகாணத்தில் உள்ள ஸ்கைடிவ்கார் அருகே உள்ள சிறைக்கு பூனை ஒன்று அடிக்கடி சென்று வந்துள்ளது.
சிறை காவலர்கள் அதன் மீது சந்தேகப்பட்டு பிடித்து பார்த்தபோது அதன் வயிற்றுப் பகுதியில் கையடக்கத்தொலைபேசிகள், பெட்டரிகள் இருந்தமை தெரியவந்ததுள்ளது.
இதையடுத்து பொலிஸா அந்த பூனையை பிடித்துள்ளான்ர். சிறைக்குள் மேலும் என்னென்ன பொருட்கள் கடத்தி வரப்பட்டன என பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பிரேசில் நாட்டு சிறை ஒன்றுக்குள் சென்ற பூனையின் உடம்பில் இதேபோன்று கையடக்கத்தொலைபேசிகள், பெட்டரிகள் உள்ளிட்டவை இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல் போதைப் பொருள் கடத்திய புறா, உளவு பார்த்த கழுகு என பறவைகள் தொடர்பாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=706 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.