பம்பலப்பிட்டியவில் பிரசித்தமான கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கணினி விற்பனை செய்யும் நிலையமொன்றை முற்றுகையிட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி மென்பொருட்கள் அடங்கிய கணினிகள் பலவற்றை கைப்பற்றியுள்ளனர்.
போலி மென்பொருள் அடங்கிய கணனிகளை விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டத்துக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட கணினிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
போலி மென்பொருட்கள் அடங்கிய கணினிகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதுடன் இது தொடர்பில் கடந்த காலங்களில் வர்த்தகர்களை தாங்கள் அறிவுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய தவறிழைப்பவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் ஐந்து இலட்சத்துக்கு மேற்படாத அபராதம் அல்லது ஆறு மாதத்துக்கு மேற்படாத சிறைத் தண்டனை அல்லது இவ்விரண்டும் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5290 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.