By Kavinthan Shanmugarajah யுடியூப்பில் முஹம்மது நபியை நிந்தனை செய்யும் வகையில் உள்ள காணொளிகளை அகற்றாவிட்டால் கூகுள் தேடல் பொறியையும் தமது நாட்டில் தடைசெய்யப் போவதாக பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.
அந்நாட்டின் தகவல் தொடர்பாடல் துறையின் புதிய அமைச்சர் ஆனுஷா ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.
முஹம்மது நபிகள் அவர்களை நிந்தனை செய்யும் வகையில் உள்ளதாகக் கூறி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த திரைப்படம் ' இன்னசன்ஸ் ஒப் முஸ்லிம்'.
இதன்காட்சிகளை யுடியூபில் இருந்து நீக்கக்கூறி பல இஸ்லாமிய நாடுகளில் போராட்டம் இடம்பெற்றது.

பாகிஸ்தானும் இத் திரைப்படக் காட்சிகளை யுடியூப்பிலிருந்து நீக்குமாறு கூகுளிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனிம் கூகுள் இதற்கு மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து கடந்த 9 மாதங்களாக பாகிஸ்தானில் யுடியூப் தடைசெய்யப்பட்டுள்ளது.
தற்போது அங்கு புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் யுடியூப் தொடர்பான பேச்சு மறுபடியும் அடிபடத் தொடங்கியுள்ளது.
யுடியூப் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாக். தொடர்பாடல் துறை அமைச்சர் ஆனுஷா ரஹ்மான், இஸ்லாமை அவமதிக்கும் வகையிலான விடயங்களை யுடியூபிலிருந்து அகற்ற கூகுள் இணங்கினால் அவ்விணையத்தளம் மீதான தடையை நீக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக கூகுளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாரெனவும், இதற்கென பணம் செலுத்தவும் தயாராகவுள்ளதாகவும் ஆனால் தமது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவிக்குமானால் இறுதிக்கட்டமாக கூகுள் தேடல் பொறியையும் பாக்கில் தடைசெய்வதைத் தவிர வேறு வழியெதுவும் தமக்கு தெரியவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.(மூலம்: http://www.virakesari.lk/article/technology.php?vid=203 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.