......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 13 June 2013

சவூதியில் சிரிய பிரஜைக்கு தலையை வெட்டி மரண தண்டனை: போதைவஸ்து கடத்தியதாக குற்றச்சாட்டு

சவூதி அரேபியாவுக்குள் போதைவஸ்துகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் சிரிய பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.

ஹுஸம் அல் ரஜுப் என்ற மேற்படி சிரிய பிரஜை பெருந்தொகையான போதைவஸ்து மாத்திரைகளை சவூதிக்குள் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
அவருக்கு வட ஜாப் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவரது மரண தண்டனையுடன் சவூதியில் இவ்வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 51 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் அந்நாட்டில் 76 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதம் ஏந்திய கொள்கை, போதைவஸ்து கடத்தல் என்பன சவூதியில் மரணதண்டனைக்குரிய குற்றங்களாகும்.

(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=723 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE