......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 29 June 2013

படகுகளில் வருபவர்களை திருப்பி அனுப்புவது இந்தோனேசியாவுடனான உறவை பாதிக்கும் -அவுஸ்திரேலிய பிரதமர் கெவின்ருத்

அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருபவர்களை திருப்பி அனுப்புவதற்கு பழைமைவாத எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட யோசனையானது இந்தோனேசியாவுடனான பிணக்கைத் தூண்டிவிடும் அபாயமுள்ளதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கெவின்ருத் இன்று தெரிவித்தார்.

அவர் பிரதமராக மீள நியமிக்கப்பட்டதற்கு பின்னர் இடம்பெற்ற தனது முதல் பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் படகுகளில் வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் விவகாரம் முக்கிய பிரச்சினையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசிய ஜனாதிபதி சுஸிலோ பம்பாங்யதோயனோவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக கெவின்ருத் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் 10,000 க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் படகுகளில் அவுஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளனர். அவர்களில் பலர் இந்தோனேசியாவிலிருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகளின் பிரகாரம் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறக் கூடியவராக கருதப்படும் எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபொட் புகலிடக்கோரிக்கையாளர்களுடன் வரும் படகுகளை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பும் யோசனையை முன் வைத்துள்ளார்.

ஆனால் இந்தோனேசியா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

(மூலம்: http://www.virakesari.lk/article/local.php?vid=5560 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE