......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 26 June 2013

கராச்சி: ஹைகோர்ட் நீதிபதியை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல்

blastபாகிஸ்தானின் கராச்சி நகரில் ஐகோர்ட் நீதிபதியை குறி வைத்து நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
கராச்சியின் பர்ன்ஸ் ரோடு பகுதியில் சிந்து மாகாண ஐகோர்ட் நீதிபதி பக்கர் மக்பூல் தனது பாதுகாப்பு பரிவாரங்கள் சூழ காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது மசூதி ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த தாக்குதலில் நீதிபதியின் டிரைவர், மெய்காப்பாளர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நீதிபதி பக்கர் மக்பூல், அவருக்கு பாதுகாப்பாக சென்ற போலீசார் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களில் காயமடைந்த சில போலீசாரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நீதிபதி தற்போது ஸ்டேடியம் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தை சிந்து மாகாண தகவல் ஒளிபரப்பு துறை மந்திரி, தலைமை செயலாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.
(MM)

(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE