2014-ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது குறித்தும், ஆப்கான் பாதுகாப்பு பொறுப்பை அந்நாட்டு வீரர்களிடம் ஒப்படைப்பது குறித்தும் இரண்டு நாட்டு அதிபர்களும் வீடியோ வழியே பேசிக்கொண்டதாக வெள்ளை மாளிகையில் இருந்து வந்த தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, தலிபான் தலைவர்களுடன் அவர்களது புது அலுவலகம் அமைந்துள்ள தோஹாவில் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தைகள் கடைசி நிமிடத்தில் ஆப்கான் அதிபரின் மறுப்பினால் நின்று போனது. அதனையடுத்து, நேற்று தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் அதிபரின் மாளிகை அருகேயுள்ள முக்கியமான கட்டிடங்களையும், அமெரிக்காவின் உளவுத்துறை தலைமையகத்தையும் தாக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்ற ஐயப்பாடு எழுந்தது.
ஆயினும், தற்போது இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த உரையாடலில், ஆப்கான் தலைவர்களைக் கொண்ட ஆப்கான் குழு ஒன்று சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதுதான் வன்முறையை நீக்கி ஆப்கனிஸ்தானில் நீடித்த அரசியலைத் தரும் என்ற தீர்மானத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை கூறுகின்றது. மேலும் இரு தலைவர்களும், உயர் அமைதிக் குழுவும், தலிபான் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் விதமாக தோஹாவில் அமைக்கப்பட்டுள்ள தலிபான்களின் அலவலகத்திற்கு தங்களின் ஆதரவை மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனைத்தவிர, இரண்டு அதிபர்களும் வரவிருக்கும் ஆப்கானிஸ்தான் தேர்தல் குறித்து விவாதித்ததாகவும், தெளிவான நியாயமான மற்றும் நம்பகமான தேர்தலே ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்திற்கு முக்கியம் என்ற முடிவினைத் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையின் சாராம்சம் வெளிப்படுத்தியது.
(Mmalar)(மூலம்: )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.