......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 29 June 2013

பௌத்த பேரினவாதத்தை தோலுரிக்கும் ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைப்பு?

The Face of Buddhist Terrorமியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குத் தலைமை தாங்கும்,பௌத்த பிக்குவான விராது மற்றும் அவரது பௌத்தம் 969 என்ற அமைப்புடன் பொதுபல சேனாவை ஒப்பிடும் கட்டுரை தாங்கிய ரைம் சஞ்சிகை சிறிலங்காவில் தடுத்து வைக்கப்படவுள்ளதாக கொழும்பு டெலிகிராப் செய்தி வெளியிடுள்ளது..

மியான்மாரில், முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த பிக்குகள் தலைமையில் நடத்தப்படும் இனவாத, மதவாதத் தாக்குதல்களைக் கண்டித்து, அதற்குத் தலைமை தாங்கும் விராது பிக்குவின் அட்டைப்படத்துடன், பௌத்த தீவிரவாதத்தின் முகம் என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டுள்ளது நியுயோர்க்கில் இருந்து வெளியாகும் ‘ரைம்‘ சஞ்சிகை.
இந்தக் கட்டுரையில் சிறிலங்காவில் தலைதூக்கும் பௌத்த பிக்குகளின் பேரினவாதம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, பௌத்த பேரினவாத அமைப்பான பொதுபல சேனாவுடன், விராது பிக்குவின் பௌத்தம் 969 என்ற அமைப்பு ஒப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரை வெளியாகியுள்ள ரைம் சஞ்சிகையின் ஜுலை மாத இதழ், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இது சிறிலங்காவில் விநியோகிக்கத் தடை விதிக்கப்படலாம் என்று தெரியவருகிறது.
எனினும் இது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்காவின ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் தெரிவித்துள்ளார்.
The Face of Buddhist Terror


(மூலம்: katankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE