-எஸ்.கே.பிரசாத்
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில், விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் போட்டியிட தீர்மானித்துள்ளார்.
இதற்காக இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான நேர்முகத் தேர்வில் தயா மாஸ்டர் கலந்துகொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்த பிரதமர் ஜயரட்ண அவர்களை தயா மாஸ்டர் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இதன்போது பிரதமர், தேர்தலில் வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் தேவையான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/71921-2013-06-22-13-01-10.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.