......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 12 June 2013

உலகின் வயதான சீனப் பெண் மரணம்

உலகின் வயதான பெண்ணாகக் கருதப்படும் சீனாவைச் சேர்ந்த லுவோ மெய்ழன் தனது 127வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தில் இருக்கும் லாங்ஹாங் கிராமத்தைச் சேர்ந்தவர் லுவோ மெய்ழென்.
சீன அரசு ஆவணங்களின்படி அவர் பிறந்த வருடம் 1885.
அப்படி என்றால் அவருக்கு வயது 127. முறைப்படி அவருக்கு தான் உலகில் வயதானவர் என்ற பெருமை கிடைத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் உலகின் வயதானவராக தற்போது கருதப்படும் ஜப்பானின் ஜீரோமோன் கிமுராவுக்கு வயது 116 தான். லுவோ பிறந்து பல ஆண்டுகள் கழித்து தான் சீனாவின் பிறப்பு தேதிகளை முறையாக பதிவு செய்யும் திட்டம் வந்துள்ளது.
அதனால் லுவோவின் வயதை சீன அதிகாரிகள் 127 என்று கூறினாலும் அதை அதிகாரிகள் அங்கீகரிக்கவில்லை.

இந்நிலையில் லுவோ தனது 127வது வயதில் காலமானார். அவருக்கு 5 பிள்ளைகள், ஏராளமான பேரக் குழந்தைகள் உள்ளனர். அவர் தனது 61வது வயதில் குழந்தை பெற்றதாக அவரது மகன் தெரிவித்தார்.

(மூலம்: http://www.virakesari.lk/article/world.php?vid=721 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE