......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 24 June 2013

வார இறுதி நாட்களை மாற்றும் சவுதி அரபியா

saudi flagசவுதி அரேபியாவில் உத்தியோகபூர்வ வேலை நாட்களாக ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளதாக அரப் நியூஸ் செய்தி  வெளியிடுள்ளது. இதனடிப்படையில்  அதிகாரபூர்வ வார இறுதி நாட்களை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளாக சவுதி அரேபியா மாற்றியுள்ளது.

இந்த வாரத்தில் இருந்து இருந்து அமலுக்கு வரும் இதற்கான உத்தரவை சவூதி அரபிய மன்னர் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகளில் சவுதி அரேபியா மாத்திரந்தான், தமது வேலை வாரத்தை சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரையாகப் பேணி வந்ததது.
பொருளாதார வாய்ப்புக்களில் ஏற்படும் இழப்பை சரி செய்ய இந்த மாற்றம் தேவைப்படுவதாக மன்னர் அப்துல்லாஹ் கூறியுள்ளார்.
ஓமான் இப்படியான ஒரு மாற்றத்தை கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE