......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 18 June 2013

மாகாணசபை அதிகாரங்கள் குறைக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – முஸ்லிம் காங்கிரஸ்

SLMC logoஅரசியலமைப்பின் 13 வது திருத்தம் தொடர்பாக மறுஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவு குழு அதிகாரங்களை குறைக்கும் வகையில் திட்டங்களை முன்வைக்கும் பட்சத்தில் 
அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் பிரதான முஸ்லீம் கட்சியும், ஆளும் கூட்டமைப்பின் பங்காளரருமான  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மாகாணசபைகளுக்கு அரசியல் சாசனத்தின் ஊடாக பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிடும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் ரபீக் ராஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை அமுலும் வலுப்படுத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்களக் கடும்போக்காளர்களை திருப்திபடுத்தும் நோக்கில் 13ம் திருத்தச் சட்டத்தி;ல் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்காது காத்திரமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ.ல.மு.கா.  தனது உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பின் 13 வது திருத்தம் தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்க கட்சி தலைமையகத்தில்  திங்கட்கிழமை (ஜூன் 17) அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்தவாரம் ஸ்ரீ.ல.மு.கா அரசியலமைப்பு சட்டம் 13 வது திருத்தச் செய்ய முன்மொழியப்பட்ட மாற்றங்களை தொடர்பான தனது ஆட்சேபனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுத்துமூலம் தெரிவித்திருந்த்தது குறிப்பிடத்தக்கது.

(மூலம்: kattankudyinfo.com)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE