இந்த புகைப்படத்தில் சனிக் கிரகத்தின் வலையத்தின் ஊடாக நமது பூமி நீல நிற சிறு புள்ளியாக தென்படுகிறது. கசினி விண்கலம் பூமியின் புகைப்படத்தைப் பிடிக்க 15 நிமிடங்கள் எடுத்ததாகவும் இந்த காலப் பகுதியில் வட அமெரிக்கா மற்றும் அட்லாண்டிக் சமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு சூரிய ஒளி படிந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 898 மில்லியன் மைல்களுக்கு அப்பாலிருக்கும் கசினி விண்கலத்திலிருந்து பூமியின் படம் பிடிக்கப்பட்டதன் மூலம் சனிக்கிரகத்தில் இருந்து பூமி எவ்வாறு தென்படுகிறது என்பதை உலக மக்களுக்கு காண முடிகிறது என நாஸா குறிப்பிட்டுள்ளது.(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/20/?fn=w1306207 )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.