......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 June 2013

கடாபி மகன் மீதான வழக்கு ஓகஸ்டில்

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்டில் இடம்பெறும் என வழக்கு தொடுனர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சைப் அல் இஸ்லாம் மற்றும் முன்னாள் சிரேஷ்ட அரச அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளில் கும்பல் சேர்த்தது, கற்பழிப்பு மற்றும் சட்ட விரோத தடுத்துவைப்பு போன்றவையும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. “நியாயமான விசாரணை நடத்தப்படும்” என லிபிய பிரதமர் அலி சைடன் பி. பி. சி.க்கு குறிப்பிட்டார்.
சைப் அல் இஸ்லாமை ஹேகில் வழக்கு விசாரணைக்காக நாடு கடத்துமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கோரிக்கைக்கு லிபிய அரசு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சைப் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படுபவராவார். எனினும் அவர் மீதான வழக்கை உள்நாட்டில் நடத்த லிபிய அரசு திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் இடம்பெறும் வழக்கு விசாரணையில் சைப் அல் இஸ்லாம் மரண தண்டனைக்கு முகம்கொடுக்க வாய்ப்பு உள்ளது.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/19/?fn=w1306194 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE