ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூதுவராகவே அமைச்சர் பசில் ராஜபக்ஷ புதுடெல்லிக்கு விஜயம் செய்யவிருக்கின்றார்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவிருக்கின்ற நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் விஜயம் அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், நாட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் வடக்கு தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் அவர் இந்திய அதிகாரிகளுக்கு எடுத்துரைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, ஜூலை 7 ஆம் திகதி இந்தியா, கொழும்புக்கு அனுப்பவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்னரே அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை அரசாங்கம் அதற்கு டில்லிக்கு அனுப்பவிருக்கிறது.
(மூலம்: http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/72843-2013-06-29-03-04-41.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.