......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 25 June 2013

காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்

தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் யுத்த விமானங்கள் காசா மீது தாக்குதல்களை நடத்தியுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் வடக்கு காசாவிலிருந்து இஸ்ரேல் மீது குறைந்தது 8 ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் இந்த தாக்குதல்களால் சேதங்கள் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
எனினும் ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மணி நேரம் கழித்து இஸ்ரேல் யுத்த விமானங்கள் காசாவின் மூன்று இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இஸ்ரேல் விமானங்கள் மத்திய காசாவிலிருக்கும் இரு ஆயுதக் கிடங்குகள் மற்றும் தெற்கு காசாவில் இருக்கும் ரொக்கெட் ஏவுதளம் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணும் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.
எனினும் இஸ்ரேல் விமானங்கள் போட்ட ஏவுகணைகள் வெட்ட வெளியில் விழுந்து வெடித்ததாகவும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பலஸ்தீன தரப்பில் கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் மூன்று பலஸ்தீன ரொக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலில் விழுந்ததாகவும் எந்தப் பாதிப்புப் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரு பலஸ்தீன ரொக்கெட்டுகளை இஸ்ரேலின் பாதுகாப்பு முறையான அயன்டோம் தாக்கி அழித்துவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ரொக்கெட் தாக்குதல்கள் தொடர்பில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் குற்றம்சாட்டிய போதும் தாக்குதலுக்கு எவரும் பொறுப்பு கோரவில்லை.

(மூலம்: http://www.thinakaran.lk/2013/06/25/?fn=w1306255 )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE