கொழும்பு, லிப்டன் சுற்றுவட்டத்திலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு அந்த சங்கம் தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆசிரியை குண்டர்களினால் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அச்சுறுத்தப்பட்டும் உள்ளார் என்பதனால் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குறித்த ஆசிரியை அவமானப்படுத்தப்பட்டுள்ளமையினால் அவருக்கு இழப்பீடு வழங்கப்படல் வேண்டும். கல்வித்துறையானது முழுவீச்சில் அரசியலாக்குவதிலிருந்து முழுமையாக விடுபடவேண்டும். ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
(மூலம்: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/71245-2013-06-17-15-01-59.html#sthash.lRtiXTkP.dpuf )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.