......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 27 June 2013

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஜே.வி.பி. கலந்துகொள்ளாது ரில்வின் சில்வா

அரசியல் தீர்வு விவகாரத்தையும் தமிழர்களின் உண்மையான பிரச்சிணைகளை மூடி மறைக்கவுமே அரசாங்கம் மீண்டும் பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்துள்ளது. எனவே ஜே. வி. பி. 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கென நியமித்துள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துக்கொள்ளாது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

சிங்கள இனவாதத்தை தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் அரசாங்கம் தூண்டி விட்டுள்ளது. இது மன்னிக்க முடியாத குற்றமாகும். கடந்த நான்கு வருடத்தில் அரசாங்கம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமையினால் நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பம் கைவிட்டுப் போயுள்ளது.

எனவே அரசாங்கத்தின் இவ்வாறான முட்டாள் தனமான நடவடிக்கைகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கட்டாய யோசனைகளையும் ஜே. வி. பி முன் வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

(மூலம்: )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE