கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள்
அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த கல்முனை பொலிஸார் பொதுமக்களுடன் இணைந்து செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை பொலிஸ் நிலையம்;, சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுடனும் சமூக ஆர்வலர்கள் அமைப்புக்களுடனும் இணைந்து மோட்டார் திருட்டுச் சம்பவங்களை தடுப்பது தொடர்பிலான விழிப்பூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதுடன் 7 விடயங்களை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கல்முனை பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. ஏ. கபார் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் மோட்டார் சைக்கில் திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 8 மோட்டார் சைக்கில்கள் திருடப்பட்டுள்ளதாக எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதை தடுப்பதற்கான முயற்சிகளை தாங்கள் மும்முரமாக மேற்கொண்டுள்ள அதேவேளை இந்நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துளைப்புக்கள் மிக அவசியம்' எனக கூறினார்.
(மூலம்: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/69151-2013-05-31-11-08-45.html )
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.