......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 10 January 2013

இஸ்லாதில்தாம்பத்திம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு....


. இஸ்லாதில்தாம்பத்திம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,

...
'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள நுழையும் போது ''பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஸக்தனா'' என்று பிரார்த்தித்து, அதன் பின் அந்தத் தம்பதியருக்கு குழந்தை விதிக்கப்பட்டால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மதீ, அஹ்மத், இப்னுமாஜா)

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!
ஒரு மூஃமினான ஆண் மூஃமினான தன் மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக்கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம். (முஸ்லிம், அஹ்மத்)

நல்ல குணம் கொண்டவர்களே ஈமானில் முழுமை பெற்றவர்கள். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே! (அஹ்மத், திர்மிதீ)

பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை! (திர்மதீ, இப்னுமாஜா)

பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டுவிட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

ஒரு பெண் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் (திர்மதீ, இப்னுமாஜா)

ஒரு பெண் தனது கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள்; அவைகளைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவாள். (புகாரி, முஸ்லிம்)

''உங்களில் ஒருவர் தன் மனைவியுடன் தாம்பத்திய உறவில் கூடிவிட்டு மறுமுறையும் கூட விரும்பினால் அவர் உளூச் செய்து கொள்ளட்டும்'' (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

''நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் உண்ணவோ உறங்கவோ விரும்பினால் தொழுகைக்குச் செய்வது போல் உளூ செய்து கொள்வார்கள்'' (புகாரி, முஸ்லிம்)


தற்காலிகக் குழந்தை பிறப்பைத் தள்ளிப் போடுவதை இஸ்லாம் அனுதித்துள்ளது. நிரந்தரக் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மனைவியின் கருப்பை வலுவிழந்த நிலையில் இருந்து குழந்தை பேற்றைப் பெற்றால் அதனால் ஆபத்து ஏற்படும் என்றிருந்தால் நிரந்தரமாகக் குழந்தைப் பிறப்பைத் தடை செய்து கொள்ளலாம். ''எந்த ஓர் ஆன்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படமாட்டாது''(அல்குர்ஆன், 002:233. 023:062)

''எங்களில் ஒருவருக்கு மாதவிலக்கு ஏற்பட்டிருக்கும்போது கீழாடைக் கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் (ஆடை கட்டிக் கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்'' அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா(ரலி) அன்னை மைமூனா (ரலி) நூல்கள், புகாரி, முஸ்லிம்

கணவன் மனைவி தாம்பத்தியம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் உறவாகும். இருவரும் ஒருவருக்கொருவர் அந்தரங்கங்களை அறிந்து கொண்டு பின்னர் அதை வெளியில் பரப்பித் திரிவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கணவனும் மனைவியும் பரஸ்பரம் தாம்பத்திய உறவில் ஈடுபட்டுப் பின்னர் மனைவியின் (தாம்பத்திய அந்தரங்க) இரகசியத்தை (பிறரிடம்) பரப்புகின்ற மனிதனே அல்லாஹ்விடம் மறுமை நாளில் தகுதியால் மிகவும் மோசமானாவன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அஹ்மத்).

நபி (ஸல்) அவர்கள் திருமணத்தில் வாழ்த்தும்போது ''பாரகல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கய்ர்'' என்று கூறுவார்கள். (திர்மிதீ, அபூதாவூத்)

பொருள்: ''அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக! நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக''
மண வாழ்வில் இணையும் கணவன், மனைவி இருவருக்கும் இஸ்லாம் அழகிய உபதேசங்களை வழங்கியுள்ளது. கணவன், மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, பிறரின் மனம் நோகாமல் நடந்து கொண்டால் இல்லறம் இனிதாகும்.

(மூலம்: fb  )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE